க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சை 2025 பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலப்பகுதி
- விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) ஊடாக மாத்திரமே கோரப்படுகின்றன.
- விண்ணப்பம் கோரப்படும் காலம்: 2026.04.06 முதல் 2026.04.22 வரை.
- பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகிய இருசாராரும் தாமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
பரீட்சார்த்திகள் பின்வரும் தளங்கள் ஊடாக விண்ணப்பிக்கலாம்:
- பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.doenets.lk.
- DoE எனும் உத்தியோகபூர்வ நடமாடும் தொலைபேசிச் செயலி (Mobile App).
- https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி.
கட்டணம் மற்றும் செலுத்தும் முறை
- ஒரு பாடத்திற்கான மீள்பரிசீலனைக் கட்டணம் ரூபாய் 250 ஆகும்.
- பணத்தை அஞ்சல் அலுவலகங்கள் அல்லது Credit/Debit கார்ட்கள் மூலம் செலுத்த முடியும்.
- கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
முக்கியமான குறிப்புகள்
- உள்நுழைவு: விண்ணப்பிக்க 2025 (உ/தர) பரீட்சைச் சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- பொதுச் சாதாரணப் பரீட்சை: இப்பரிட்சையில் 30 இற்குக் குறைவான புள்ளிகள் பெற்றவர்களும் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்.
- விளைவு: மீள்பரிசீலனையின் போது Z புள்ளிகள் அல்லது தரங்களில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதை பரீட்சார்த்திகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
- ஆவணங்கள்: விண்ணப்பித்த பிறகு விண்ணப்பப்படிவத்தை PDF முறையில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
| Details | English | Sinhala | Tamil |
| Application | onlineexams.gov.lk/eic |
| Closing Date | 22.04.2026 |






