✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 16, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

தரம் 6 ஆங்கிலப் பாட நூலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கி வினியோகிக்க நடவடிக்கை

by Ana F
January 2, 2026
in News
தரம் 6 ஆங்கிலப் பாட நூலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கி வினியோகிக்க நடவடிக்கை
Share on Facebook

தரம் 6 ஆங்கிலப் பாடத்திற்கான மொடியூலில் (Module) இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய மற்றும் பொருத்தமற்ற பகுதிகளை நீக்கி, அந்தப் புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நூல்களில் உள்ள குறித்த பகுதிகளை நீக்கிய பின்னரே விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இந்த மொடியூல் புத்தகங்கள் சுமார் 3.5 இலட்சம் பிரதிகள் அச்சிடுவதற்காக 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொழும்பிலுள்ள களஞ்சியசாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகங்கள் எவையும் இதுவரை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை செயலாளர் உறுதிப்படுத்தினார்.

பொருத்தமற்ற பகுதிகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய பகுதிகள் விநியோகிக்கப்படவுள்ளதோடு, இது தொடர்பாக ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிவுறுத்தல் கோவையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

கல்வி தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உலபனே சுமங்கல தேரரினால் இந்த மொடியூலின் உள்ளடக்கம் குறித்து பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பாடமொன்றுடன் தொடர்புடைய மேலதிக விபரங்களைத் தேடுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளம் ஒன்றினூடாக, ஓரினச்சேர்க்கை செயற்பாடுகளைப் ஊக்குவிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் சேர்க்கப்பட்டமையானது ஏதேனும் ஒரு சதித்திட்டத்தின் விளைவாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பல ஆசிரியர் சங்கங்களும் இது குறித்து முறைப்பாடு செய்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Lankadeepa-

Related Posts

அரசு அலுவலகங்கள்
News

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

April 15, 2026
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 13, 2026
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல்
News

எதிர்வரும் 15, 16, 17 ஆகிய தினங்களில் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்: அரசாங்கம் அறிவிப்பு

April 11, 2026
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்
News

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

April 11, 2026

Recommended

மஹபொல கொடுப்பனவு

மஹபொல கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – நாளை முதல் விநியோகம்

1 month ago
தேசிய கல்வியியல் கல்லூரிகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகள் – ஆசிரியராகும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

2 days ago

Popular News

  • அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு: ஒரு முழுமையான வழிகாட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் ஆசிரியர் சேவை: அறிவொளி புகட்டும் உன்னதப் பயணத்திற்கான இரு பிரதான வழிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – உயர் கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய கல்வியியல் கல்லூரிகள் – ஆசிரியராகும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.