அரசு அலுவலகங்களின் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகள் மீள ஆரம்பமாவது குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்
உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் அனைத்து அரச அலுவலகங்களும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பம்
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20 ஆம் திகதி) அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அன்றைய தினம் பாடசாலைகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







