2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தரம் 6 மாணவர் அனுமதி தொடர்பான முதலாம் சுற்று மேன்முறையீடுகள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2026.01.12 முதல் 2026.01.25 வரை இணையவழி (Online) ஊடாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஐ அணுகுவதன் மூலம் ஆகக் கூடியது 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.
- அல்லது, http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகவும் நேரடியாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







