தென் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) நிறுவும் திட்டம் தற்போது மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஷான் கே.ஆர். பத்திரன தெரிவித்தார்.
பல்வேறு சவால்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியிலும் காலி மாவட்டத்தில் 150 பாடசாலைகளிலும், மாத்தறை மாவட்டத்தில் 25 பாடசாலைகளிலும், மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 பாடசாலைகளிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தென் மாகாண கல்வி அமைச்சு மற்றும் தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் நேரடித் தலையீட்டுடன் இத்திட்டத்திற்கான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், இத்திட்டத்திற்கு சமாந்திரமாக குறித்த 200 பாடசாலைகளிலும் நவீன கணினி ஆய்வுகூடங்களும் (Computer Labs) நிறுவப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்காக, இருபத்தி மூன்று கோடியே, எண்பது லட்சத்து, எழுபத்தெட்டு ஆயிரத்து, அறுநூற்றுத் தொண்ணூற்று ஏழு ரூபா (ரூ. 238,078,697) செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பின்வரும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன:
- 2200 டப்லெட் கணினிகள் (Tablet Computers)
- 200 சார்ஜிங் நிலையங்கள் (Charging Stations)
- 200 ஸ்மார்ட் போர்டுகள் (Smart Boards)







