✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 16, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home Articles

இலக்கு சாய்வு விளைவு (Goal Gradient Effect): கல்வித்துறையில் ஆழமான மாற்றத்தை உருவாக்கும் உளவியல் அணுகுமுறை

by Ana F
April 3, 2026
in Articles
இலக்கு சாய்வு விளைவு (Goal Gradient Effect): கல்வித்துறையில் ஆழமான மாற்றத்தை உருவாக்கும் உளவியல் அணுகுமுறை
Share on Facebook

-ஜெஸார் ஜவ்பர்-

கல்வி என்பது வெறும் அறிவு பரிமாற்ற செயல்முறை மாத்திரமல்ல. மாறாக அது ஒரு உளவியல் இயக்கமும் கூட. (psychological process). இந்த இயக்கநிலையை “ஊக்கல் அல்லது உந்துதல்” (Motivation) கோட்பாடு தீர்மானிக்கின்றது.

பல மாணவர்கள் கல்விப் பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினாலும், அந்த உற்சாகம் காலப்போக்கில் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக தாமதம், சோர்வு, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

இத்தகைய சவால்களுக்கு ஒரு உளவியல் சார்ந்த தீர்வாக விளங்குவது தான் இலக்கு சாய்வு விளைவு (Goal Gradient Effect).

1. Goal Gradient Effect என்றால் என்ன?

1932 ஆம் ஆண்டு உளவியல் அறிஞர் Clark L. Hull முன்வைத்த இந்தக் கோட்பாடு, மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் இலக்கை அணுகும் போது அவர்கள் காட்டும் நடத்தை மாற்றத்தை விளக்குகிறது.

இந்தக் கோட்பாட்டின் மையக் கருத்து பின்வருமாறு

“ஒரு இலக்கை அடைவதற்கான தூரம் குறையும்போது, அதனை அடைய மனிதன் காட்டும் முயற்சி, வேகம் மற்றும் ஈடுபாடு அதிகரிக்கிறது.”

இது ஒரு “முன்னேற்ற உணர்வு” மூலம் இயக்கப்படுகிறது.

மாணவர் ஒரு செயலின் இறுதிக்கட்டத்தை அணுகும்போது, அவரது மூளையில் டொபமைன் (dopamine) சுரப்பு அதிகரித்து, மேலும் வேகமாக செயல்பட தூண்டுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் உதாரணங்கள் இதனை மேலும் தௌிவுபடுத்துகின்றன.

100 பக்கப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர், 90வது பக்கத்தை அடைந்தவுடன் வேகமாக முடிக்க முயல்வார்.

10 வினாக்களில் 8 முடித்த மாணவர், மீதமுள்ள 2-ஐ உடனே முடிக்கத் தூண்டப்படுவார்.

2. கல்வி உளவியலில் இதன் செல்வாக்கு

இலக்கு சாய்வு விளைவு, நடத்தைவாதம் (Behaviorism) மற்றும் உந்துதல் கோட்பாடுகள் (Motivational Theories) ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது.

இது குறிப்பாக கீழ்க்கண்ட உளவியல் கோட்பாடுகளுடன் இணைகிறது:

Reinforcement Theory (மீள வலியுறுத்தல் கோட்பாடு) – சிறிய சிறிய வெற்றிகள் தொடர்ந்து முயற்சியை அதிகரிக்கும்

Self-Determination Theory – சுய முன்னேற்ற உணர்வு உள் உந்துதலை உருவாக்கும்

Expectancy-Value Theory – இலக்கு நெருக்கமாக இருக்கும் போது அதன் மதிப்பு அதிகமாக உணரப்படும்

இதனால், இந்த விளைவு கல்வி உளவியலில் ஒரு “high-leverage strategy” ஆக கருதப்படுகிறது.

3. வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடிய உத்திகள்

கல்வி உளவியல் கோணத்தில் பார்க்கும்போது, மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டை (engagement) உயர்த்துவது என்பது வெறும் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கும் அப்பாற்பட்ட செயல். அது ஒரு “learning design process”.

இதில் இலக்கு சாய்வு விளைவு (Goal Gradient Effect) ஒரு “instructional accelerator” ஆக செயல்படுகிறது. கீழே கூறப்படும் யுக்திகள், அதை வகுப்பறையில் முறையாக ஒருங்கிணைக்க உதவக்கூடும்

3.1. இலக்குகளை சிறிய அலகுகளாக பிரித்தல் (Micro-Goal Structuring)

ஒரு பெரிய பாடப்பகுதி மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் அதையே சிறிய, எளிதில் அடையக்கூடிய இலக்குகளாக மாற்றினால், அது “manageable learning units” ஆக மாறுகிறது.

கட்டமைப்பு அணுகுமுறை:

Unit → Lesson → Activity → Task → Output
“Macro → Micro → Nano learning”

இதனை விரிவாக பின்வருமாறு நோக்கலாம்.

Science Chapter: “ஔித்தொகுப்பு”

Subtopic 1: வரைவிலக்கணம்
Activity 1: எண்ணக்கரு வரைபடம் (Concept mapping)
Activity 2: படத்தில் குறித்தல் Diagram labeling

Subtopic 2: செயன்முறை Process
Activity 1: Video observation
Activity 2: Flowchart creation

இவ்வாறு பிரிக்கும்போது:

மாணவர்கள் அடிக்கடி “completion feedback” பெறுகிறார்கள். அத்தோடு Cognitive load குறைவதோடு தொடர்ச்சியான சாதனை உணர்வு உருவாகிறது

Advanced Strategy:

“2-day micro goals” (Short cycle planning)
“Exit tickets” (lesson-end completion markers)

3.2. முன்னேற்றதைக் காட்சிப்படுத்தல் (Visual Progress Systems)

மனித மூளை “visible progress” க்கு மிகவும் வலுவாகப் பதிலளிப்பதாக உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“நான் எங்கே இருக்கிறேன்?” என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் தான் “நான் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?” என்பது தெளிவாகும் என்பதே இதன் விளக்கமாகும்.

பின்வரும் முறைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் பின்பற்ற முடியும்

1. Progress Bar Board (Classroom Wall):
ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றமும் காட்சி வடிவில் வகுப்பறையில் காட்சிப்படுத்த முடியும்.

2. Digital LMS Dashboard: (Google Classroom, Moodle போன்றவற்றில் முன்னேற்ற அளவுகளை காட்சிப்படுத்தப்படும்

3. Checklist-based Learning:
“✔ Completed Tasks” பட்டியல் – ஒவ்வொரு சிறிய இலக்குககள் அடையப்பட்டதன் பின்னர் அதற்கு எதிரே ✔ அடையாளம் இட்டு அதனை காட்சிப்படுத்தலாம்.

பயிற்சி நிலை உதாரணம்:

10 activities → 7 completed → 70% visible

இதனால்:

மாணவரின் மூளை “near completion signal” பெறுகிறது
மோட்டிவேசன் தன்னிச்சையாக அதிகரிக்கிறது

இதனை மேலும் விரிவாக பின்வரும் முறையில் பின்பற்றலாம்.

“Color Coding System” (Red → Yellow → Green progression)
“Milestone Mapping” (25%, 50%, 75%, 100%)

3.3. இடைநிலை மீளவலியுறுத்தல் (Incremental Reinforcement)

மாணவர்கள் பெரும்பாலும் இறுதி முடிவுக்காக மட்டுமே காத்திருக்கும்போது, அவர்கள் motivation குறைகிறது.
ஆனால் இடைநிலை சாதனைகள் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டால், அது “reinforcement loop” உருவாக்குகிறது.

Reinforcement வகைகள்:

1. Immediate Reinforcement
“Very good”, “Excellent reasoning” போன்ற உடனடி பாராட்டுக்களை வழங்குதல்

அத்தோடு பின்வரும் முறைகளையும் பயன்படுத்த முடியும்

* வாராந்த அடைவுகளுக்கான பாராட்டு
* சகபாடி பாராட்டு

ஆசிரியர்கள் பின்வரும் பரிசளிப்பு முறைகளையும் பயன்படுத்தலாம்.

* Stickers / Stars
* Digital badges (Seal)
* இன்றை தினத்தின் மாணவர் “Student of the Day” recognition

இது பின்வரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்

1. Dopamine activation
2. நடத்தை உருக்காம் (Habit formation)
3. நேர் கற்றல் இணைவு. (Positive learning association)

இதன் போது பின்வரும் விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. பரிசு “meaningful” ஆக இருக்க வேண்டும்
2. Over-rewarding தவிர்க்கப்பட வேண்டும்
3. போலியாக இருக்கக் கூடாது
4. அநீதி பக்கச்சார்பு என்பன தவிர்க்கப்படல் வேண்டும்

3.4. போட்டி உருவாக்கம்

கற்றலை விளையாட்டு அமைப்புக்களாக மாற்றி பயன்படுத்த முடியும்.

இதன் போது Game Mechanics பயன்படுத்த முடியும்

1. புள்ளிகள் வழங்குதல் Points (Score accumulation)
2. கற்றல் மட்டங்கள் Levels (Progress stages)
3. அடைவுகளுக்கான இலட்சினைகள் Badges (Achievement markers)
4. புள்ளிகளின் அடைவுகளை காட்சிப்படுத்தல் Leaderboards (Social comparison)

ஆசிரியர்கள் வகுப்பறை செயல்பாடுகளை பின்வருமாறு ஒழுங்கமைக்க முடியும்

1. “Quiz Missions”
2. “Challenge Rounds”
3. “Group Competitions”

இதற்கான உதாரணங்கள்

Level 1 → 5 tasks complete
Level 2 → unlock next content
Final Level → Master badge

இதன் உளவியல் விளைவுகள் பின்வருமாறு அமையும்

1. மாணவர்கள் “players” ஆக மாறுகிறார்கள். இது கற்றலைத் தூண்டும்.
2. Failure → Retry mindset உருவாகிறது. மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கை உருவாக்கும்.
3. Learning → Game experience ஆக மாறுகிறது. இது கற்றலை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகிறது.

3.5. Deadline Structuring (நேர எல்லை வடிவமைப்பு)

கற்றலில் மிக முக்கியமான ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் அம்சம் “time discipline” அவதானிக்கப்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை Open-ended tasks ஆகவே அமைந்துவிடுகின்றன.
“Complete this when you can” → Motivation drop
மாணவர்கள் தள்ளிப்போடுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊக்கல் குறைந்து விடுகிறது.

இதனை பின்வரும் Structured deadlines களாக அமுல்படுத்த முடியும்

1. Clear start point + clear end point ஆரம்ப மற்றும் முடிவுத் திகதிகள் மாணவர்களை ஊக்குவிக்கும். மாணவர்கள் urgency உணர்வுடன் செயல்படுவார்கள்

பின்வரும் Deadline Designகளையும் பயன்படுத்தலாம்.

1. Micro Deadlines
2. Daily targets
3. “By end of period” completion
4. Short-term Milestones
5. Weekly goals
6. “Finish 3 subtopics this week”
7. Final Deadline
8. Project submission date

இதன் மூலம் உளவியல் பின்வருமாறு தொழிற்படுகிறது.
Time pressure → Focus increase
Near deadline → Goal Gradient Effect activation

உதாரணமா-
Task: 10 questions
Time: 20 minutes
Progress: 6 completed → last 4 done faster

4. மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய சுய-கற்றல் உத்திகள்

இன்றைய கல்வி சூழலில், மாணவர்கள் “teacher-dependent learners” ஆக இல்லாமல் “self-directed learners” ஆக மாறுவது மிகவும் அவசியமானது. இந்த மாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு இலக்கு சாய்வு விளைவு (Goal Gradient Effect) ஒரு சக்திவாய்ந்த உளவியல் கருவியாக அமைகிறது. கீழே காணப்படும் உத்திகள், மாணவர்கள் தங்களது கற்றலை திட்டமிட்டு, தொடர்ந்து முன்னேற உதவும்.

4.1. SMART இலக்கு அமைத்தல் (Strategic Goal Design)

SMART கூறுகள் பின்வருமாறு அமைகிறது

1. Specific (துல்லியம்): என்ன செய்ய வேண்டும்?
2. Measurable (அளவிடத்தக்கது): எவ்வளவு?
3. Achievable (அடையக்கூடியது): சாத்தியமா?
4. Relevant (தொடர்புடையது): என் இலக்குடன் பொருந்துமா?
5. Time-bound (நேர எல்லை): எப்போது முடிக்க வேண்டும்?

விரிவான உதாரணம்:

ஒரு மாணவன் தனது இலக்கை “இன்று படிப்பேன்” → என தீர்மானிக்கும் போது அது ஊக்கல் குறைந்ததாக அமையும்

அதே இலக்கை பின்வருமாறு அமைத்துக் கொண்டால் அது ஊக்கல் கொண்டதாக மாறும்.

✅ “இன்று இரவு 7–8 மணி வரை 15 MCQ முடிப்பேன்”

4.2. 80% விதி (Near Completion Trigger Strategy)

பல மாணவர்கள் அதிகம் செய்யும் தவறு — இலக்கு 70–80% முடிந்த பிறகு அதை நிறுத்திவிடுகின்றனர்.

ஆனால், இந்த கட்டமே Goal Gradient Effect மிக வலுவாக செயல்படும் தருணம்.

“Finish line அருகில் இருக்கும் போது, மூளை அதிக ஆற்றலை வெளியிடும்.”

பின்வரும் பயன்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தலாம்.

10 வினாக்களில் 7 முடிவடைந்தால் → உடனே 10ஐயும் முடிக்கவும்
5 topics-ல் 4 முடிவடைந்தால் → 5வதை உடனே முடிக்கவும்

4.3. Pomodoro + Goal Gradient இணைப்பு (Time-Motivation Synchronization)

Pomodoro Technique என்பது நேர முகாமைத்துவ உத்தியாகும். இதை Goal Gradient Effect உடன் இணைத்தால் அது “high-efficiency learning cycle” ஆக மாறும்.

இதன் அடிப்படை அமைப்பு:

25 நிமிடம் கவனமான படிப்பு
5 நிமிடம் இடைவேளை

Goal Gradient இணைப்பு:

ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு “mini goal”
Example: “இந்த 25 நிமிடத்தில் 5 MCQ முடிக்க வேண்டும்”

Cycle Effect:

1st Pomodoro → ஆரம்பம்
2nd Pomodoro → முன்னேற்றம்
3rd Pomodoro → near completion → வேகமான செயல்பாடு

4.4. Self-Reward Mechanism (சுய பரிசளிப்பு முறைமை)

மூளை “reward anticipation system” மூலம் இயங்குகிறது.
அதனால், ஒரு task முடிந்தவுடன் சிறிய பரிசு பெறுவது motivation-ஐ அதிகரிக்கும்.

சாதாரண Self-Rewards பின்வருமாறு அமையலாம்.

1. 5–10 நிமிட இடைவேளை
2. Social media check
3. சிறிய snack

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முடிவடைந்தால் மட்டுமே பரிசு பெற்றுக் கொள்ள வேண்டும்.

பின்வரும் பரிசு அமைப்பையும் நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தலாம்.

1 task → small reward
3 tasks → medium reward
Full goal → big reward

4.5. Progress Journaling (முன்னேற்ற பதிவேடு)

தினசரி கற்றல் முன்னேற்றத்தை பதிவு செய்வது, self-awareness-ஐ பெரிதும் அதிகரிக்கிறது.

Journal வடிவம் பின்வருமாறு அமையலாம்.

1. இன்று செய்தவை
2. முடித்த இலக்குகள்
3. சந்தித்த சவால்கள்
4. நாளைய திட்டம்

உதாரணங்கள்

Completed: 12 MCQ
Pending: 3 MCQ
Issue: Time management

இதன் பயன்கள்:

Self-reflection திறன் அதிகரிக்கும்
Achievement perception உருவாகும்
தொடர்ச்சியான முன்னேற்றம் கண்காணிக்கப்படும்

5. கல்வி அமைப்பில் (System Level) இதன் தாக்கம்

இலக்கு சாய்வு விளைவு, தனிநபர் மட்டுமல்லாமல் முழு கல்வி அமைப்பையும் மாற்றக்கூடியது.

5.1. பாடத்திட்ட வடிவமைப்பு (Curriculum Design)

Traditional Model:

பெரிய பாடப்பகுதிகள்
End-term focus

Modern Approach:
Modular Curriculum:
பாடம் → modules → units → tasks

Competency-Based Progression:
“Time-based” அல்ல, “skill-based” முன்னேற்றம்

மாணவர்கள் தங்கள் வேகத்தில் கற்றுக்கொள்வார்கள்
அடிக்கடி completion experience கிடைக்கும்

5.2. மதிப்பீட்டு முறை (Assessment Reform)

பழைய முறையில் தவணை இறுதிப் பரீட்சைகள் மாத்திரமே உண்டு.

புதிய முறையில் Continuous Assessment, Formative Evaluation மாணவர்களுக்கு completion experience ஐ வழங்கும்.

6. சவால்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களும் (Critical Perspective)

இது ஒரு சக்திவாய்ந்த உத்தி என்றாலும், தவறாகப் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும்

6.1. Reward Dependency (பரிசு சார்பு)

இதற்கு மாணவர்கள் கடுமையாகப் பழக்கப்பட்டால் “Reward இல்லாமல் கற்றல் இல்லை” என்ற மனநிலை உருவாகக்கூடும்.

Intrinsic motivation (உள் ஆர்வத்தை வளர்த்தல்) இதன் அடிப்படையாக அமையும் போது மாணவர்கள் பரிசுகளில் ஊக்கல் அம்சங்களில் அதிகம் சாராமல் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

6.2. Surface Learning Risk

மாணவர்கள் “Finish quickly” என்ற எண்ணத்தில்
Deep understanding-ஐ புறக்கணித்து இலக்கை முடிப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட கற்றலுக்கு பழக முடியும்.

எனினும் Conceptual questions, Application-based tasks முறைகள் மூலம் இப்பிரச்சினையை குறைக்கலாம்.

6.3. Competition Anxiety

சில மாணவர்களுக்கு இலக்கை முடிப்பதற்கான காட்சிப்படுத்தல்களை அடிக்கடி பார்ப்பது stress மன அழுத்தத்தை உருவாக்கலாம்.

இதற்கு Self-progress comparison (past vs present), மற்றும் Cooperative learning strategies மூலம் முகாமை செய்யலாம்.

இந்த உத்தி உலகளாவிய ரீதியில் பொது ஊக்குவிப்பாகவும் கல்வித் துறைக்கான ஊக்குவிப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொருத்தமான வகையில் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கற்றலில் மாணவர்களை ஊக்கலை அதிகரிப்பதற்கான நடைமுறைகளை அமுல்படுத்த முடியும்.

உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை கொமண்ட் செய்யுங்கள்.

-ஜெஸார் ஜவ்பர்-
03.04.2026

கல்வித்துறை ஆக்கங்கள் மற்றும் பதிவுகளைப் பெற இணைந்து கொள்ளுங்கள்

https://whatsapp.com/channel/0029VbBzT7C05MUe1VUALx3g

Related Posts

பின்லாந்து கல்வி முறை:அண்மைக்கால நெருக்கடிகளும் மீட்புத் திட்டமும்
Articles

பின்லாந்து கல்வி முறை:அண்மைக்கால நெருக்கடிகளும் மீட்புத் திட்டமும்

March 31, 2026
பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபா உதவித்தொகை வங்கிகளில் வைப்பீடு
News

பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபா உதவித்தொகை வங்கிகளில் வைப்பீடு

January 1, 2026

Recommended

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலதிகமாக ரூ. 10,000 கொடுப்பனவு

3 months ago
இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் 5% உயர்வு!

இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் 5% உயர்வு!

1 month ago

Popular News

  • அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு: ஒரு முழுமையான வழிகாட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் ஆசிரியர் சேவை: அறிவொளி புகட்டும் உன்னதப் பயணத்திற்கான இரு பிரதான வழிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – உயர் கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய கல்வியியல் கல்லூரிகள் – ஆசிரியராகும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.