இலங்கையில் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக தேசிய QR கட்டண முறைமையை (LANKAQR) அறிமுகப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நாளை (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
தேசிய QR கட்டண முறைமையை அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வில் (National QR Payment Adoption Launch). ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாளை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அன்றாட சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் போது அதிகளவில் பணத்தாள்களை (Cash) பயன்படுத்துவதால், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி என்பன பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக அடையாளங் காணப்பட்டுள்ளது







