2026ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் தவணைக் கால அட்டவணை தொடர்பான முக்கிய அறிவிப்பைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளுக்கான விடுமுறை மற்றும் மீள ஆரம்பமாகும் திகதிகள் பின்வருமாறு:
பாடசாலை விடுமுறை (நிறைவடையும் திகதி)
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தற்போதைய கல்வி நடவடிக்கைகள் 2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன.
- சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்: முதலாம் தவணை நிறைவு.
- முஸ்லிம் பாடசாலைகள்: முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் நிறைவு.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி
சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர், அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் 2026 ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
- சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்: இரண்டாம் தவணை ஆரம்பம்.
- முஸ்லிம் பாடசாலைகள்: முதலாம் தவணையின் நான்காம் கட்டம் ஆரம்பம்.
குறிப்பு: அனைத்து அரச மற்றும் கல்வி அமைச்சின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இந்தத் தீர்மானம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








