இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் (CEWET) கீழ், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாருக்குத் தகுதி?
இந்தக் கல்வி உதவித்தொகை பின்வரும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது:
- கல்வி நிலைகள்: க.பொ.த உயர்தரம் (A/L), பட்டப்படிப்பு (Degree) மற்றும் இலங்கையிலுள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள்.
- வயது எல்லை: 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தகைமை: க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சையில் குறைந்தது 6 பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள் (நிழற்படப் பிரதிகள்):
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வருவன இணைக்கப்பட வேண்டும்:
- பிறப்புச் சான்றிதழ்.
- க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத்தாள்கள்.
- பெற்றோரது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் அவர்களது தொழில் தொடர்பான தோட்ட அத்தியட்சகரின் அத்தாட்சி கடிதம்.
- விண்ணப்பிக்கும் மாணவரின் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம்.
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை:
- இணையத்தளம்: www.hcicolombo.gov.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- நேரடியாக: கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் (36-38 காலி வீதி, கொழும்பு 03) அல்லது கண்டியிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தில் (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, கண்டி) பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி:
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2026 ஏப்ரல் 28ஆம் திகதிக்கு முன்னதாகவோ அல்லது அன்றைய தினமோ பின்வரும் முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்:
கௌரவ செயலாளர்,
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET),
மே/பா இந்திய உயர் ஸ்தானிகராலயம்,
த.பெ.இலக்கம்-882, காலி வீதி, கொழும்பு-03.
| Details | English | Tamil |
| Application | click Here |
| website | www.hcicolombo.gov.in |
| ClosingbDate | 288.04.2026 |






