2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள், வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் பார்வையிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்
சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் (Practical Examinations) ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், சாதாரண தரப் பரீட்சை முடிவுகளையும் மிக விரைவில் வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







