✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 23, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

இலங்கை அதிபர் சேவை 2025 வருடாந்த இடமாற்றங்கள்: அமுலாக்கல் திகதி மற்றும் மேன்முறையீட்டு விபரங்கள் வெளியீடு

by Ana F
January 5, 2026
in News
தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Share on Facebook

இலங்கை அதிபர் சேவையின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம் முக்கிய விபரங்கள் வருமாறு:

நடைமுறைப்படுத்தப்படும் திகதி இந்த வருடாந்த இடமாற்ற உத்தரவுகள் 2026.01.06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இடமாற்றம் பெற்றுள்ள அதிகாரிகளை, அவர்களுக்குப் பதிலீடாக வேறு அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காது, குறித்த திகதியில் புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க ஏதுவாக உடனடியாக விடுவிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நடைமுறைகள் இடமாற்ற உத்தரவுகள் குறித்து திருப்தியடையாத அதிகாரிகள் அரச சேவைகள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் 2026.01.19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக atslps2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதேவேளையில், அதன் பிரதியொன்றை Info@psc.gov.lk என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலின் தலைப்பில் (Subject) இடமாற்றப் பட்டியலின் தொடர் இலக்கத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகும்.

தாமதமாகக் கிடைக்கும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.

கடமைக்குச் சமூகமளித்தல் மற்றும் எச்சரிக்கை

புதிய சேவை நிலையங்களில் கடமைக்குச் சமூகமளிக்கும் அதிகாரிகள், இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் (2026.01.19 இற்கு முன்) அமைச்சுக்கு அறிக்கையிட வேண்டும்.

உரிய திகதியில் புதிய சேவை நிலையத்திற்குச் சமூகமளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக, தாபன விதிக்கோவையின் விதிகளுக்கு அமைய ‘சேவை துறப்பு’ (Vacation of Post) அறிவித்தல் விடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாகாணப் பாடசாலைகளுக்கான கோரிக்கை இந்த இடமாற்றங்கள் காரணமாக போக்குவரத்துச் சிரமங்கள் அல்லது ஏனைய நியாயமான காரணங்கள் இருப்பின், அதிகாரிகள் தமக்கு வசதியான மாகாணப் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்ள 14 நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள்

SLPS Annual Transfer 2025

வட்ஸ்அப் இல் தொடருங்கள்

https://whatsapp.com/channel/0029VbBzT7C05MUe1VUALx3g

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

முச்சக்கரவண்டி கட்டணத்தை உயர்த்த சங்கம் கோரிக்கை

பெற்றோல் விலை அதிகரிப்பு: முச்சக்கரவண்டி கட்டணத்தை உயர்த்த சங்கம் கோரிக்கை

1 month ago
தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

4 months ago

Popular News

  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
  • களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) – 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.